Wednesday, January 25, 2012

வடபுல போக்குவரத்து சேவையை பலப்படுத்த, விசேட நடவடிக்கையாம்!

வடபுல போக்குவரத்து சேவையினை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிவதற்கென, விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி டிப்போவில் நிலவும் குறைபாடுகளை கண்டறிவற்காக அங்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ரோஹண திசாநாயக்க புதிய பஸ் சேவைகளை நடாத்த வேண்டிய வீதிகளை இனங்கண்டு, அவற்றில் புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பணிப்புரை வழங்கியதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

டிப்போவின் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்த மற்றும் புதிதாக 4 பஸ் வண்டிகளை வழங்குவது தொடர்பாகவும், பேச்சுவார்ததையில் தீர்மானங்கள் எட்டப்ட்டுள்ளதாகவும் இரவுநேர பஸ் சேவைகள் தொடர்பிலும், விசேடமாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com