Tuesday, January 3, 2012

அமெரிக்க விமான நிலையத்தில் வெடி பொருட்களுடன் இளைஞன் கைது.

அமெரிக்க வடக்கு கரோலினாவில் உள்ள ஹோப் மில்ஸ் பகுதியை சேர்ந்த வாலிபர் டிரேஸ்காட் அட்வாடர், இவர் விமானத்தில் பயணம் செய்ய டெக்காசில் உள்ள மிட்லேண்ட் சர்வதேச விமான நிலையம் சென்றார். அப்போது அவரை எக்ஸ்ரே ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தனர்.

அப்போது அவர் தன்னுடன் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வெடி பொருட்களை எடுத்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com