ஒவ்வொரு மருத்துவர்களும், கிராம மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- அப்துல் கலாம்
இலங்கை வந்துள்ள முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கொழும்பு தேசிய வைத்திய சாலையின் கண் மருத்துவ பிரிவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் அங்கு கருத்து தெரிவித்த அவர் தாம் ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மருத்துவர்களும். கிராம மக்களுக்கு சேவை செய்ய அவர்களுடைய சேவையில் சில வருடங்களை ஒதுக்க வேண்டும என்று மருத்துவர்களிடம் கோரியிருந்ததாகவும் இந்த கோரிக்கையினை இந்திய மருத்துவர்கள் ஏற்றதுடன் அது ஆக்கபூர்வமாக பிரதிபளிப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் இலங்கை மருத்துவ நிபுணர்களும் கிராம புறங்களில் சேவை செய்ய வேண்டும் என இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment