Tuesday, January 3, 2012

எல்.ரி.ரி.ஈ. முத்திரைகள் உத்தியோகபூர்வமானவை அல்ல: பிரான்ஸ்

பிரான்ஸில் வெளியிடப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் சின்னங்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை கொண்ட முத்திரைகள் பிரான்ஸின் உத்தியோகபூர்வ முத்திரைகள் அல்ல என கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

வே. பிரபாகரன் மற்றும் புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரை பிரான்ஸில் வெளியிடப்பட்டதாக வெளியான செய்திகள் தொடர்பாக, கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயம் வெளியிட்டுள் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழீழ விடுதலை புலிகளின் சின்னங்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை கொண்ட முத்திரைகள் பிரான்ஸின் உத்தியோகபூர்வ தபால் திட்டத்தின் ஒரு பகுதி அல்ல. அவை பிரெஞ்சு தபால் அலுவலகங்களில் விற்கப்படுவதுமில்லை.

எனினும், பிரெஞ்சு தபால் சேவையான "லா போஸ்ட்" டில் சில நிபந்தனைகளின் கீழ் குறிப்பிட்ட அளவு பிரத்தியேக முத்திரைகளை வாடிக்கையாளர்கள் அச்சிட்டுக்கொள்ளும் முறை உள்ளது. இந்த வசதியை பயன்படுத்தியே தனி நபர்கள் சிலர் இவ்வாறான முத்திரைகளை அச்சிட்டுள்ளனர்.

இந்த முத்திரைகளுக்கான கட்டளை கொடுக்கப்பட்ட போது, அவை உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை அதிகாரிகள் கவனிக்க தவறிவிட்டனர் என்பதை லா போஸ்ட் உணர்ந்துள்ளது.
2006 ஆம் ஆண்டு பயங்கரவாத இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் எல்.ரி.ரி.ஈ. பட்டியல் படுத்தப்பட்டமை குறித்து பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இந்த முத்திரிகைகள் மேலும் அச்சிடப்படமாட்டாது எனவும் லா போஸ்ட் உறுதியளித்துள்ளது.

பிரெஞ்சு தபால் சேவையும் ஒரு பகுதியாகவுள்ள "குரூப் லா போஸ்ட்" 1991 முதல் சுயாதீனமான, கைத்தொழில் மற்றும் வர்த்த நிறுவனமாகவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com