பாடசாலை சேவை வேன் சாரதிகளின் தகைமைகளை ஆராய ஜனாதிபதி உத்தரவு
பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன் சாரதிகளின் தகைமை மற்றும் அனுபவம் தொடர்பில் ஆராயுமாறு, ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்கஸை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய விபத்து தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான சிறந்த வாகன சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வேன் சாரதிகள் செயற்படுவார்களாயின், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் இணைப்புச் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்கிசையில் நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வானும் பஸ்ஸும் மோதி விபத்திற்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி வான் 80 -100 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment