ஈ.பி.டி.பி யின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்திய நிசாந்தனது பதவி பறிப்பு
ஈ.பி.டி.பி யின் ஊழல் மோசடிகளை வெளியே அம்பலப்படுத்திய உறுப்பினர் நிஷாந்தனது உறுப்பினர் பதிவியை ஈ.பி.டி.பி பறித்துள்ளது.யாழ்.மாநகர சபைக்கான தேர்தலின் போது ஆளும் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டு நிஷாந்தன் வெற்றி பெற்றார்
ஈ.பி.டி.பியில் வெற்றயீட்டியபோதும் மாநகர சபையில் இடம்பெறும் ஈ.பி.டி.பி யின் மோசடிகளை வெளி உலகிற்கு தொடர்ச்சியாக அவர் கூறி வந்த நிலையிலேயே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதோடு இவரது மாநகர சபை உறுப்பனர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இவருக்கு இது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் உத்தியோக பூர்வமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. ஈ.பி.டி.பி யில் பங்காளியான ஜக்கிய மக்கள் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.டி.பி இவரது பெயரை விலக்கியதைத் தொடந்தே இவர் பதிவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
விலகிய இவர் தற்போது ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் இராமநாதன் அங்கஜனுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை ஈ.பி.டி.பி யின் சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்ற மங்களநேசன் என்னும் உறுப்பினரும் மாநகர சபையின் உறுப்பினர் பதியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்
இதனால் இன்று நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
0 comments :
Post a Comment