விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதற்கு ஜே வி பி எதிர்ப்பு
விருப்பு வாக்கு முறைமையை நீக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்ட மூலத்திற்கு ஜே.வி.பி. எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விருப்பு வாக்கு முறைமையை நீக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எனினும்,ஜே.வி.பி. இதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரமடைய ஜனாதிபதி முறையையும், தேர்தல் முறை யையும் ஒரே சமயத்தில் மாற்ற வேண்டும்.. அப்படியில்லாமல் தேர்தல் முறையை மாத்திரம் மாற்றுவது ஜனநாயக விரோத அதிகார முறைக்கு இட்டுச் செல்ல வழிவகுக்கும்.
எனவே, விருப்பு வாக்கு முறைமையை நீக்குவதற்கு எதிராக தமது கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment