Sunday, January 8, 2012

சுவிட்சர்லாந்தில் மீண்டும் முருங்கையில் ஏறும் வேதாளம்.

கருணாவின் நிகழ்வில் புலிகளின் முக்கியஸ்தரான சமூக விரோதிக்கு மகுடம்.

கருணாவின் ஏற்பாட்டில் சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளவேண்டாம் என புலிகளால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த கலைஞர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் புலிகளின் எதிர்ப்பிரச்சாரங்கள் யாவற்றையும் மீறி நிகழ்வு நடந்தேறியது, திட்டமிட்டபடியே இந்திய கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பிட்ட நிகழ்வு கருணா குழுவினால் நிகழ்த்தப்படுவதாக புலிகள் பிரச்சாரம் செய்திருந்தபோதும் கலைஞர்கள் புலிகளின் மிரட்டலை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இங்கு நகைப்புக்குரிய விடயம் யாதெனில் கருணாவினால் மேற்படி நிகழ்வு நடாத்தப்படுகின்றது என புலிகள் தெரிவித்திருந்தமையாகும். ஏனென்றால் கருணா தற்போது இவ்வாறான எந்த முயற்சிகளிலும் ஈடுபடுவதில்லை. அவர் யாராவது இசை நிகழ்சி ஒன்றை நடாத்தினால் அங்கு குடும்ப சகிதம் சென்று பாட்டுக்கு ஆடிவிட்டுவந்தால் போதும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளார். அதையே அவர் செய்தும் வருகின்றார்.

ஒரு பொது கலை நிகழ்வு என அறிவிக்கப்பட்டிருந்தபோதும்: மிரட்டி நிகழ்வை தடுக்க முனைந்த புலிகள் அது நிறைவேறாதபோது இறுதியில் தமது வக்கிர நிகழ்வுகளையும் அங்கே அரங்கேற்றியுள்ளனர். சின்னஞ்சிறு பாலகர்களை கொலைவெறி மற்றும் இனவெறியூட்டும் பாடலொன்றுக்கு ஆடவைத்து தாம் பயங்கரவாதத்தை கைவிடுவதற்கு தயாரா இல்லை என்பதை நிருபித்து காட்டியுள்ளனர்.

சிறுவர்களை இவ்வாறான வன்செயலை தூண்டும் நிகழ்வுகளில் பயன்படுத்துவது சட்டரீதியாக தடை செய்யப்பட்து மாத்திரமல்ல : சுவிட்சர்லாந்தின் துர்கா எனும் மாநிலத்தில் சிறுவர்களை வன்செயலைத் தூண்டும் நிகழ்வுகளில் நடிக்கப்பண்ணியமைக்காக சிலருக்கு தண்டனை விதிக்கப்பட்ட வரலாறு உண்டு.

அத்துடன் சுவிட்சர்லாந்தின் பத்திரிகைகள் தொடர்சியாக புலிகள் சிறுவர்களை வன்செயலைத்தூண்டும் நிகழ்சிகளில் பயன்படுத்துவைதை விமர்சித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இந்நிகழ்வினை பொதுநிகழ்வு என விளம்பரம் செய்து மக்களை அழைப்பித்து மேற்படி வன்செயலை தூண்டும் நிகழ்வுகளை அரங்கேற்றியதில் அதிருப்தியடைந்திருந்த மக்கள் : அங்கு சமூக விரோதி ஒருவருக்கு மகுடம் வழங்கிய நிகழ்வு கண்டு அதிர்சியடைந்துள்ளனர். ரவுடி சிங்கப்பூர் என அறியப்படுகின்ற நபர் தனது சகோதரனுடன் இணைந்து சகோதரனின் மனைவியை கொடுரமாக தலையை வெட்டி கொலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் குற்றத்தினை சகோதரன் ஏற்றுக்கொண்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டவர்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தனது சகோதரனின் மனைவியை அவர் வேலை செய்யும் இடத்தினுள் புகுந்து தலையை வெட்டி கொலைசெய்ததுடன் , கொலையை பார்த்த ஒரு பெண்ணையும் வெட்டினர். கணவனின் மனைவி ஸ்தலத்திலேயே பலியானார், காயமடைந்த பெண் இதுவரைக்கும் கோமாவில் இருக்கின்றார். இச்சம்பவம் சுவிட்சர்லாந்தில் ஒட்டுமொத்த தமிழினத்தையும் வெட்கி தலைகுனிய வைத்திருந்தது.

இவ்வாறான ஒரு நபரே புலிகளின் கலைபண்பாட்டுக்கு பொறுப்பாளராகவுள்ளார். இவரே மேற்படி நிகழ்வில் வன்செயலைத்தூண்டும் நிகழ்வொன்றை தொகுத்து அதன் நடிப்புக்கு சிறுவர்களை அமர்த்தியுள்ளார். பாட்டு ஒன்றுக்கு புலிக்கொடியை சுமந்த வண்ணம் ஆடும் அச்சிறுவர்கள் அடிடா , அடிடா என்று ஆவேஷமாக கத்துவதையும் , பிரபாகரன் மீண்டுவருவார், மீண்டும் சிங்களவனை அடிக்கவேண்டும் என தெரிவிப்பதையும் இங்கு காண்கின்றீர்கள்.



மேற்படி வீடியோவினை இங்கு தரவேற்றியமைக்கான காரணம், இதில் நடிக்கின்ற சிறுவர் சிறுமியரின் பெற்றோர் இக்குழந்தைகள் இவ்வாறாதோர் வன்செயலைத் தூண்டும் நிகழ்வில் நடிக்கின்றார்கள் என்ற விடயத்தை அறிந்திருப்பார்களா? என்ற சந்தேகமே. காரணம் சில பெற்றோர், சில இடங்களுக்கு கலையை பயில்வதற்காக சேர்க்கின்றபோது, குழந்தைகள் இவ்வாறு தவறாக வழி நடாத்தப்படுவதை அறிந்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்திருந்தாலும் அதன் விபரீதத்தை உணர்வதும் இல்லை. எனவே அவர்கள் இதை மீண்டும் ஒருமுறை பார்வையிட்டு எதிர்வரும் காலங்களில், என்குழந்தை இவ்வாறு வன்செயலை தூண்டுவதற்கு அனுமதிப்பதா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

அத்துடன் கலைநிகழ்வு என மக்களை அழைத்து இவ்வாறான வன்செயலைத்தூண்டும் நிகழ்வினை நிகழ்சி ஏற்பாட்டாளர்கள் எனப்படும் சுவிஸ் தமிழ் கலை மன்றத்தினர் அரங்கேற்றியுள்ளனர்.

இவ்வாறானதோர் வன்செயல் நிகழ்வு ஒன்றினை பணம்செலுத்தி பார்வையிட மக்கள் வந்திருக்கவில்லை. இது தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் தகுந்த விளக்கத்தை வழங்க வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com