புலிகளின் புதிய தலைவர் நெடியவனைக் கைது செய்ய சர்வதேச பிடியாணை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக நோர்வேயில் இருந்து செயல்பட்டு வருகின்ற நெடியவனுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நோர்வேயில் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். கறுப்புச் சந்தை வியாபரத்திலும் சம்பந்தம் உடையவர் என்று சந்தேகிக்கப்படுகின்ற இவரது சொந்த பெயர் சிவபரன் பேரின்பநாயகம்.
1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வட்டுக்கோட்டை.யில் பிறந்த இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர். அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஒருவரhக இருந்துள்ளார்.
கே.பி என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சுயம் பிரகடனம் செய்து கொண்டார் நெடியவன்.
பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இவரை கைது செய்கின்றமைக்கு உதவி செய்ய வேண்டுமென சர்வதேச பொலிஸாரிடம் இலங்கை கோரி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment