இலங்கையில் முதலிடுங்கள். உலக முன்னணி வர்த்தகர்களிடம் பங்குச்சந்தையின் தலைவர்.
இலங்கை குறகியகால இடைவெளியில் அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி பாராட்டத்தக்கது தக்கது எனக்குறிப்பிட்டுள்ள லண்டன் பங்குச்சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சேவியர் ரொலட், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு உலகின் முன்னணி வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெய்லி பைனன்ஸியல் டைம் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே சேவியர் ரொலட் இந்த வேண்டுகோளை விடுது;துள்ளார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மிகவும் பலமடைந்துள்ளது. சர்வதேச ரீதியிலான மூலதனத்தை இலங்கை ஈர்க்கச் செய்வதற்காக, இலங்கை வர்த்தகர்கள் ஆர்வம் காட்ட வேண்டுமென்றும் அவர் அச்செவ்வியில் மேலும் கூறியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தொடர்ந்தும் அதி உயர் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு உண்டு எனவும் உட்கட்டமைப்பு வசதிகள், போக்குவரத்து, நிர்மாணம், சுற்றுலா போன்ற துறைகள் தொடர்பாகவும் அவர் இந்த செவ்வியில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment