யாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்?
கடந்தவாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன விடயம் யாது? யாழ்பாணம் சென்ற அவர் தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நியாயமானதும், என்னவென்று யாருக்கும் தெரியாததும், எவரும் இதுதான் என்று கூற தயங்குவதுமான தீர்வு பற்றி ஏதாவது திருவாய்மலந்தருளுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அப்துல் கலாம் அவர்களோ அங்கு குழுமியிருந்த யாழ்பாணத்து ஆசான்களான பேராசிரியர்கள், பெரியார்கள் உட்பட மாணவர்கள் யாவருக்கும் ஒரு சில போதனைகளை புகட்சிச் சென்றார். அதுவும் அதனை அவர் சாதாரண பேச்சு வடிவல் பேசிச் சென்றிருக்கவில்லை தனது போதனைகள் இவர்களின் மனங்களில் பசுமரத்து ஆணியாக பதியவேண்டும், அதனை அவர்கள் பின்பற்றவேண்டும் என்ற சிந்தனையுடன், நான் சொல்வதை நீங்கள் மீண்டும் சொல்லி உங்கள் மனங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள், என பவ்வியமாக அவர்களை தனது வசனங்களை மீளவும் கூறச்செய்தார்.
அவர் அங்கு இறுதியாக கூறியது யாதெனில் என்னுடைய இதயத்தில் எனது தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கின்றது என்ற வாக்கியமாகும். (My national flag flies in my heard )
அத்துடன் அவர் போதித்தது, வன்முறையை மறக்கவேண்டும், அமைதியை நாடவேண்டும், எனது நாடு என்ற எண்ணம்வேண்டும், நாட்டுக்காக உழைப்பேன் என்ற உறுதிவேண்டும், நேர்மை வேண்டும், கடின உழைப்பு வேண்டும், இலக்கு வேண்டும் என அடுக்கி கொண்டே போகலாம்.
ஓட்டு மொத்தத்தில் அவர் கூறியது, இலங்கையர்களாகிய நீங்கள் வெளியார்வந்து உங்களுக்கு யாவற்றையும் செய்து தரவேண்டும் என்று பார்த்துக்கொண்டு இருக்ககூடாது உங்களை நாட்டை முன்னனேற்ற நீங்களே உழைக்கவேண்டும் என்ற செய்தியாகும்.
ஆனால் அவர் அங்கு சுமார் 40 நிடங்கள் பேசியிருந்தார், அதிலே உள்ள சில விடயங்ளை தணிக்கை செய்து சில ஊடகங்கள் காணஒளியாக வெளியிட்டிருந்தன , மேலும் அப்துல்கலாம் அவர்கள் தனது கணித ஆசிரியர் யாழ்பாணத்தவர் என்ற செய்தியை சொல்லியிருந்ததை தலைப்புச்செய்தியாக வெளியிட்டு தற்பெருமை பேசிக்கொண்டன. இவற்றுக்கு அப்பால் அப்துல்கலாம் அவர்கள் ஐந்து கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, ஒருவரைத்தவிர எவரும் கேள்வி கேட்கவில்லை என்பனவாகும்.
திரு அப்துல் கலாம் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியின் மீதான விருப்பு, வெறுப்பு, விமர்சனங்களுக்கு அப்பால், அவர் உயர்ந்த மனித பண்புகள் கொண்ட , சிறந்ததோர் பார்போற்றும் விஞ்ஞானி அவார். அவர் யாழ்பாணத்திற்கு வந்து தனக்கு பேசக்கிடைத்த அத்தனை நிமிடங்களிலும் கூறிய வாசகங்களில் சிலவற்றை அப்படியே கீழே தருகின்றோம். இதிலிருந்து உலகம் இன்று தமிழரிடமிருந்து எதை எதிர்பார்கின்றது என்பதனை உணர முடியும்.
இந்த உலகத்திலே நம்மிடையே பல பிரச்சினைகள், சுயநலம், நம்பிக்கையின்மை, சமூகப்பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு, இவற்றின் மூலம் வன்முறை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்ததவஸ்தலம் என்ன செய்தியை பரப்புகின்றது என்றால் நாம் ஒவ்வொரு நான் , எனது என்ற எண்ணத்தை நமது மனதில் இருந்து நீக்கினால், நம்மிடையே உள்ள தற்பெருமை மறையும் , தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையிலான வெறுப்பு அகலும், வெறுப்பு நம் மனதிலிருந்து அகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால் அமைதி நிலவும், நம்மனதை தழுவும். வன்முறை மறையும்.
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன் பறந்துகொண்டே இருப்பேன்
பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.
என்னுடைய கருத்து என்னவென்றால்,
உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்,
இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு,
அதை அடைய உழைப்பு முக்கியம்,
உழை, உழைத்துக்கொண்டே இரு.
இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாதவர்.
அதாவது தோல்விமனப்பாண்மைக்கு வெற்றி தோல்வியை கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்பதுதான் இந்த திருகுறலின் மூலக்கருத்தாகும்
இந்த நூற்றாண்டில் அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா, ரத்தமில்லா ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அகிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள்.
ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது இளைளுர்களாகிய உங்கள் கைகளில் தான் சிந்தனை செயல்களில் தான் உள்ளது
நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்கள். ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக.
அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் தனித்துவமானவன் என்பதை நிருபிப்பேன் இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
இந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றி பாடிய
கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு
இலட்சியம். நான் சொல்வதை திரும்ப சொல்லவும்
இலட்சிய தாகம்.
நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா
இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,
அறிவுப்புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.
இந்த கவிதையின் கருத்து
அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள்
தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்
உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
I will have a goal and work hard to achieve that goal.
I realize small aim is a crime.
I will work with integrity and succeed with integrity
I will be a good member of my family, a good member of the society, a good member of the nation and a good member of the world.
I will always protect and enhance the dignity of every human life without any harm
I will always remember that "Let not my winged days, be spent in vain".
I will always work for Clean Green Energy and Clean planet Earth.
As a youth of Nation Sri Lanka, I will work and work with courage to achieve success in all my tasks and enjoy the success of others.
My national flag flies in my heard
0 comments :
Post a Comment