ஆஸ்திரியாவில் கடும்பனியினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வடக்கு ஆஸ்திரியாவிலுள்ள பல நகரங்களில் கடும் பனி பொழிவு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரியாவின் புகையிரத பாதைகள் பனிபொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. உல்லாச பயணிகள் அதிகளவில் வருகை தரும் சுற்றுலா தளங்களை மூடுவதற்கு ஆஸதிரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்தவியாழன் முதல் ஒரு சில பிரதேசங்களில் 4 அடி உயரத்திற்கு பனி படலங்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இராணுவம், மற்றும் நிவாரண பணியாளர்கள் வீதிகளிலுள்ள பனிப்படலங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வொரல்பேர்க் பனிசரக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 50 உல்லாச பயணிகள் ஹெலிக்கப்படர்கள் மூலம் காப்பாற்றப்பட்டனர்.
0 comments :
Post a Comment