ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழுவின் புதிய நியமனங்கள் அறிவிப்பு
ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு புதிய நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது.கட்சியின் மாகாணசபை உறப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன இக் கூட்டம் திங்களன்று கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், முன்னணியின் பொதுச்செயலாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கட்சியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி தேசிய அரசியல் தளத்தில் இருந்து கட்சிப்பணி ஆற்றுவார்.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கங்கை வேணியன் முன்னணியின் கொழும்பு மாநகர சபை குழுத்தலைவராக பணியாற்றுவார். மாநகரசபையின் போக்குவரத்து தொடர்பிலான நிலையியல் குழுவின் தலைமை பதவியும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தலைவர் மனோ கணேசனின் பதவி விலகலால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு கட்சியின் நிர்வாக செயலாளரும்,மக்கள் கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பிரியாணி குணரத்ன ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டு பணியாற்றுவார்.
முன்னணியின் கொழும்பு மாநகர வாக்காளர்கள் அதிகபட்ச பயன் பெரும் விதத்தில் கொழும்பு மாநகர சபையின் நிர்வாக இயந்திரத்தை கட்சியுடன் ஒருங்கிணைக்கும் விசேட பணி இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னணியின் ஊடக செயலாளராக மாநகரசபை உறுப்பினர் எஸ். பாஸ்கரா செயல்படுவார்.
முன்னணியின் கொழும்பு வடக்கு தொகுதி அமைப்பாளராக மாநகரசபை உறுப்பினர் லோரன்ஸ் பெர்னாண்டோ, கொழும்பு மேற்கு தொகுதி அமைப்பாளராக மாநகரசபை உறுப்பினர் எஸ். குகவரதன், கொழும்பு கிழக்கு தொகுதி முதலாம் வலய அமைப்பாளராக மாநகரசபை உறுப்பினர் எஸ். பாஸ்கரா, இரண்டாம் வலய அமைப்பாளராக சுருதி ஆர். பிரபாகரன், மத்திய கொழும்பு தொகுதி முதலாம் வலய அமைப்பாளராக ஜெனிபர் பெர்னாண்டோ,இரண்டாம் வலய அமைப்பாளராக முரளி வேலாயுதன், மூன்றாம் வலய அமைப்பாளராக மாநகரசபை உறுப்பினர் கே.டி. குருசாமி, பொரளை தொகுதி முதலாம் வலய அமைப்பாளராக முரளி ரவீந்திர ஜெயராஜ், இரண்டாம் வலய அமைப்பாளராக எம். தங்கவேலு ஆகியோர் கடமை ஆற்றுவார்கள்.
கொலொன்னாவை தொகுதியின் அமைப்பாளராக நகரசபை உறுப்பினர் பிரதீப் எம். ராஜ்குமார், கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ஜெரோம் விக்னேஸ்வரன் ஆகியோர் கடமை ஆற்றுவார்கள். மாநகரசபை இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி கொழும்பு மாநகர மக்களின் உட்கட்டமைப்பு பொதுவசதிகளை உயர்த்தும் நோக்கில், கொழும்பு மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பு முன்னணியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக கேப்டன் ராஜா, ஒருங்கிணைப்பாளராக ஜெரோம் விக்னேஷ்வரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக முன்னணியின் கொழும்பு, தெகிவளை-கல்கிசை மாநகரசபை உறுப்பினர்கள், கொலோன்னவை நகரசபை உறுப்பினர் ஆகியோர் கடமை ஆற்றுவார்கள். முன்னணியின் மலையக தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் பணியாற்றுவார். இதற்கு மேலதிகமாக முரளி ரகுநாதன் முன்னணியின் நுவரெலிய மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றுவார்.
ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் நிதிச்செயலாளராக முன்னணியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் கே. ராஜ்குமார் பணியாற்றுவார். இதற்கு மேலதிகமாக கே. ராஜ்குமார் அம்பகமுவ தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றுவார்.
0 comments :
Post a Comment