ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்தோரால் ஜனநாயகத்துக்கு பேராபத்து- மைத்திரிபால சிறிசேன!
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்றவர்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், கிளர்ச்சியொன்றை திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. பிரிவினர் பாடசாலை பிள்ளைகள் மத்தியிலும், பல்கலைக்கழக மாணவர் மத்தியிலும் தங்களை வீரர்களைப் போன்று காட்டி , எமது நாட்டின் இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை சீர்குலைக்க எத்தனிக்கிறார்கள் என்றும் அமைச்சர் எச்சரிக்கை செய்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் வன்முறைகளும், மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களும் எமது நாட்டுக்கு புதியதல்ல என்று தெரிவித்த அமைச்சர், இப்போது முன்பு இடம்பெற்ற பல்கலைக்கழக ஆர்ப் பாட்டங்களை விட இந்த ஆர்ப்பாட்டங் கள் வன்முறைகளாக மாறி ஒரு கிளர்ச்சி யாக உருவெடுக்கும் ஆபத்து தோன்றியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர’பாக எச்சரிக்கையாக இருக்குமாறும் அமைச்சர் மக்களை கேட்டுள்ளார்.
0 comments :
Post a Comment