பிரித்தானியாவுக்கான பிரதித்தூதுவர் திடீர் இடம்மாற்றம்.
பிரித்தானியாவுக்கான பிரதித்தூதர் ஹம்சா திடீர் இடமாற்ற செய்யப்படுவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. கடந்த வருடத்தில் சுமார் 9 மாதங்கள் பிரித்தானியாவுக்கான இலங்கைப் பதில் தூதுவராக மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டு வந்த அவர் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டதை அடுத்து தற்போது ஜேர்மனிக்கான பிரதி தூதுவராகச் செல்வதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மாதத்திலிருந்து இடமாற்றம் அமுலுக்கு வரும் என அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment