Saturday, January 21, 2012

பிரபாகரனின் பெரிய பலவீனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் பொதுவாக காணப்பட்ட பலவீனங்களில் முக்கியமான ஒன்றை அமெரிக்கா அறிந்து வைத்து இருந்தது. பிரபாகரன் ஆனாலும் சரி ஜே. ஆர் ஆனாலும் சரி இருவரும் அவரவர் மக்களிடம் இருந்து ஒதுங்கி இருந்திருக்கின்றனர் என்று அமெரிக்கா கண்டு கொண்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த ஒரு ஆங்கில பத்திரிகை THE SATURDAY REVIEW.

இப்பத்திரிகைக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் நல்ல உறவு இருந்து வந்து உள்ளது.

இப்பத்திரிகையின் மூத்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்தவர் லூயிஸ் போல்.

இவர் கொழும்புக்கு வந்திருந்த நாட்களில் 1987 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவரை சந்தித்துப் பேசி இருக்கின்றனர்.

ஒபரேசன் லிபரேசன் தாக்குதலால் புலிகள் இயக்கம் எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றார் போல்.

புலித் தலைவர் பிரபாகரனுக்கும், ஜனாதிபதி ஜே.ஆருக்கும் இடையிலான பெரிய பலவீனம் என்னவென்றால் அவரவர் மக்களிடம் இருந்து ஒதுங்கி தனித்து உள்ளனர் என்று போல் குறிப்பிட்டு உள்ளார்.

1987 ஆம் ஆண்டு ஜூலை 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைக்கப் பெற்று உள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com