Thursday, January 26, 2012

கக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்

தமிழர் அரசியலில் வாந்தி எடுப்பதும் அதனை தாமே நக்கித் தின்பதும் சர்வசாதாரணமான விடயங்களாக மாறியுள்ளது. முன்னொரு காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் எடுபிடிகள் எனவும் , புலிகளை ஏகபிரதிநிதிகள் என உலகிற்கு சொல்வதற்காக புலிகளால் உருவாக்கப்பட்ட ஓர் குழுவே இக்கூட்டமைப்பு எனவும், இவர்களுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக எந்த அக்கறையும் கிடையாது எனவும் ஓலமிட்ட புளொட் அமைப்பினரும், புளொட் அமைப்பினரைப் பார்த்து சமூக விரோதக்கும்பல் எனவும், ஒட்டுக்குழுக்கள் எனவும், சிங்களத்தின் அடிவருடிகள் எனவும் வசை பாடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தாம் கக்கியிருந்த வாந்திகளை தாமே நக்கி தின்றுவிட்டு தற்போது மாறி மாறி புகழாரம் சூட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்தவரிசையில், தற்போது தான் கக்கிய வாந்திகளை நக்கி தின்பதற்கு தயாராகின்றார் பிள்ளையான என்கின்ற, முன்னாள் குழந்தைப்புலி. அண்மையில் பிள்ளையான் சம்பந்தனுக்கு நேசக்கரம் நீட்டி எழுதியிருந்த கடிதம் ஒன்றை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தது. 01.01.2012 திகதி எழுதப்பட்டிருந்த கடிதத்தில் 15 நாட்களுக்குள் பிள்ளையான் சம்பந்தனிடம் சாதகமான பதிலினை எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் இருபது நாட்கள் கடந்தும் சம்பந்தனிடம் பதில் கிடையாததை தொடர்ந்து நொந்துபோன பிள்ளையான் கடிதத்தின் பிரதியினை ஊடகங்களுக்கு கசியவிட்ததோடு விடயம் அம்பலமாகியுள்ளது. அதுவரை, அமெரிக்க தூதரகத்திடம் சம்பந்தன் இறுமாப்பு பிடித்த பிடிவாதக்காரன் என பத்மினி கூறியதை உறுதிப்படுத்தும் வகையில் பிள்ளiயானின் கடிதத்தை கணக்கிலெடுக்காமல் இருந்த சம்பந்தனை ஊடகங்கள் இறுக்கிப்பிடித்ததை தொடர்ந்து கதைக்கின்றேன் ஐயா என்று பல்டி அடித்துள்ளார்.

மத்தியில் என்றுமே எதிர்கட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கோஷங்களை மாத்திரமே எழுப்பி மக்களை சூடேற்றி, குளிர்காய்ந்து கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் அரசியலில் எதிர்கட்சி என்பதை இல்லாதொழிக்க கங்கணம் கட்டி நிற்கின்றது. தமிழர் தரப்பில் உள்ள சகல கட்சிகளையும் அழித்துவிட்டால் தமது ஊத்தைகளை வெளியே கொண்டுவருவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என அவர்கள் கருதுகின்றனர். அதன்பொருட்டு ஒற்றுமை எனும் போலிக்கோஷத்தினூடாக சகல கட்சிகளையும் கூட்டமைப்பு எனும் கூட்டே இல்லாத அமைப்பினுள் உள்வாங்கிக்கொண்டால் எதிர்க்கட்சி என்பதே இல்லை என்பதும் அவர்களின் நோக்கம்.

இந்தநோக்கத்தினை தகர்த்ததெறிய நிமிர்ந்து நிர்க்க வக்கில்லாத பிள்ளையான், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கும்பிடு தொட்டான் போட நினைப்பது வேதனை தருகின்றது. தமிழ் மக்கள் தனித்துவமான இனம் என்றால், தனித்துவமான அரசியல் உரிமை உண்டு என்றால், தமிழர் மத்தியில் வலுவான எதிர்க்கட்சியும் இருக்கத்தானே வேண்டும்.

பிள்ளையான் சம்பந்தனுக்கு எழுதிய கடித்தத்தில் தன்னை அறிமுகப்படுத்திய வசனங்கள், பூனை கண்ணை முடிக்கொண்டு பால் குடித்த கதையாகவே உள்ளது. கிழக்கு மாகாண மக்களின் ஆணையை பெற்றவன் என்ற தோரணைக்கு அப்பால், தமிழ் மக்களின் உரிமைக்கான விடுதலைப் போராட்டத்தில் 15 வருடங்கள் பங்கெடுத்தவன் என்ற ரீதியில் சம்பந்தனுக்கு கடிதம் எழுதுகின்றாராம்.

யாருக்கு பாரும் இந்த செப்படி வித்தை காட்டுகிறீர், மக்களின் ஆணையை பெற்றீரோ? முதலமைச்சர் ஆசனத்தில் உங்களை யார் அமர வைத்தது என்பதையும் எதற்காக அமர வைத்தார்கள் என்பதையும் மறந்து மக்கள் ஆணை தந்ததாக கதை விடுகின்றீர்கள். புலிகளின் தளபதிகளுக்கு கூசா தூக்கி திரிந்த உங்களை இவ்வாசனத்தின் வைத்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதற்கு மூலகாரணமாக இருந்த இராணுவ அதிகாரி வகுத்த வியூகம் யாதெனில் , இவ்வாறான கூசா தூக்கிய ஒன்றை இப்பெரும் ஆசனத்தில் அமர வைக்கும்போது , பிரபாகரனின் கீழ் நிற்கின்ற தளபதிகளுக்கு தலை கிறுகிறுக்கும், எங்களுக்கு கூசா தூக்கினது இப்ப முதலமைச்சராக இருக்குது நாம் எதற்காக இவ்வாறு சாகவேண்டும் என சிந்திப்பார்கள், அத்துடன் நாமும் சென்றால் இதைவிட மேலாக ஏதாவது கிடைக்கும் என மன உலைச்சலுக்கு உள்ளாவர்கள் எனதே ஆகும். இந்த உண்மையை மறந்து மக்கள் ஆணையை பெற்றேன் என்றெல்லாம் சொல்லக்கூடாது. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவன் என்ற ரீதியில் எனச் சொல்ல வெட்கப்படகூடாது.

அடுத்து, 15 வருடங்கள் அர்பணிப்புடன் போராடினியளோ? புலிகளியக்கத்தில் இருந்தபோது அவ்வியக்கம் மக்களுக்கா போராடவில்லை என்பதை உணர்ந்திருந்ததாகவும், எங்கள் தலைவர் கருணா பிரிந்து வர எடுத்த முடிவு எங்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கி தந்ததாகவும், அதுவரை மூச்சு விடுவதற்கு கூட பயத்தில் இருந்த நாங்கள் என்றெல்லாம் பால்வடிய கதையளந்தது பொய்யா?

நீங்கள் 15 வருடம் மக்களுக்காக போரடியது என்று கூறினால் , புலிகள் மக்களுக்காக போராடினர் என்றெல்லோ அர்த்தப்படுத்த முனைகின்றீர்கள். புலிகளின் தலைவர்கள் மக்களுக்காக போராடவில்லை, அவர்கள் மக்களின் பெயரால் சுகபோகம் அனுபவித்தார்கள் என்று ஊடகங்களுக்கு கூறியது இன்னும் ஞாபகம் உண்டா?

புலிகளியக்கத்தில் 15 வருடங்கள் மக்களுக்காக போராடியதாக கூறுகின்றீர்கள், அப்பாவி ஒருவனை அடித்து கொன்றதற்காக ஒன்றரை வருடங்கள் புலிகளின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது வெளியே வருவதற்காக போராடிய அந்த காலமும், அதன்பின்னர் சிறையிலிருந்து விடுவித்த புலித்தளபதிகளுக்கு கூசாத்தூக்கித்திருந்ததும், தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமா?

இதற்கும் அப்பால் தாங்கள் புலிகளின் தளபதிகளிடம் நற்சான்றுதல் பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை வாட்டி வதைத்து , விவசாயி உதிரத்தை வியர்வையாக்கி பெற்ற அறுவடைகளுக்கு எவ்வாறு வரி அறவிட்டு மக்களால் நாய்கும் கேவலமான மனிதனாக பார்க்கப்பட்டீர்கள் என்பதுடன் கூடிய ஏகப்பட்ட சித்து விளையாட்டுக்கள் யாவும் மீண்டும் புரட்டிப்பார்க்கத் தூண்டாத விடயங்களாக இருக்கவேண்டுமாக இருந்தால் செப்படி வித்தைகளை நிறுத்திக்கொள்வது நன்று.

எனவே புலிகளுடன் இணைந்து தமிழ் மக்களுக்காக எந்தக்கால கட்டத்திலும் போராடவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு, இலங்கை அரசு புலிகளின் கொடும்பிடியிலிருந்து மக்களை மீட்டெடுக்க மேற்கொண்ட நடவடிக்கையில் தாங்கள் செய்திருக்ககூடியதும் பயன்தரக்கூடியதுமான செயற்பாடுகளை (ஆட்களை கடத்தி கப்பம் பெற்றது அல்ல) மக்களுக்கான போராட்டமாக முன்நிறுத்தி தங்களை அறுமுகப்படுத்துவதே சிறந்ததோர் எதிர்காலத்திற்கு வழிவிடும் என நம்புகின்றேன்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com