பாதுகாப்பற்ற முறையில் லொறியொன்றை அதி வேகமாக செலுத்தி மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு மரணத்தையும் , மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த நபருக்கு காயத்தையும் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட லொறி சாரதிக்கு , நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன பத்து வருட காலம் ஒத்தி வைத்த இரண்டரை வருட கடூழிய சிறைத்தன்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார் .
இதற்கு மேலதிகமாக சம்பவத்தில் மரணமான நபரின் மனைவிக்கு ஒன்றரை இலட்சம் ரூபாவும் , விபத்தில் படு காயமடைந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாவும் நஸ்டயீடாக வழங்குமாறும் பிரதிவாதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மஹவெஹர , மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த வசந்தகுமார (36 வயது) என்பவருக்கே ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் அபராதமும் நஸ்டயீட்டு தொகையும் விதிக்கப்பட்டது.
.2005, செப்டம்பர் 8 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் இந்த நீதிமன்றின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டபன்னல பிரதேசத்தில் லொறி ஒன்றை பாதுகாப்பற்ற முறையில் செலுத்தி , பன்னல வெல்பல்ல பிரதேசத்தை சேர்ந்த பிரோன் ஜயகொடி என்பவருக்கு மரணத்தையும், சுகத் ஜயகொடி என்பவருக்கு படுகாயத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரதிவாதி மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment