ஆயுத ஏற்றறுமதியியில் பிரான்ஸ்ஸ் நான்காவது இடம்!
சர்வதேச ரீதியிலான ஆயுத ஏற்றுமதியில் பிரான்ஸ் நான்காவது இடத்தை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2010ல் அதன் ஆயுத ஏற்றுமதியின் மொத்தப் பெறுமதி 7.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். எல்லாவிதமான நவீன தொழில்நுட்பங்களையும் கொண்ட ஆயுதங்களைத் தயாரிக்கும் ஒருசில நாடுகளில் பிரான்சும் ஒன்றாகும். இருப்பினும் அமெரிக்காவே இன்னமும் உலகின் ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடாகும்.
ஆமெரிக்கா உலகின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 53.7 வீதத்தைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் ஆக 6 வீதத்தையே கொண்டுள்ளது. பிரான்சின் ஆயுத ஏற்றுமதியில் 27 சதவீதம் மத்திய கிழக்கிற்கும், 25 சதவீதம் லத்தீன் அமெரிக்காவிற்கும், 18 சதவீதம் ஆசியாவிற்கும் செல்கின்றன.
2010 – 11ம் ஆண்டுகளில் உலக ஆயுத சந்தையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஸ்யா மற்றும் இஸ்ரேல் என்பன 90 சதவீத ஆதிக்கத்தைக் கொண்டிருந்துள்ளன. இதிலிருந்து உலகம்
முழுவதும் யுத்தங்களைத் தூண்டிவிட்டு, அதில் ஆயுத விற்பனை செய்து கோடிகோடியாகப் பணம் சம்பாதிப்பவர்கள் யார் என்பது புரிகிறதல்லவா?
மற்றும்படி இவர்கள் உலக சமாதானம் பற்றி தொண்டை கிழியக் கதைப்பதெல்லாம், 'ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத' கதைதான்!
சாராம்சத் தகவல்: IANS
0 comments :
Post a Comment