அமெரிக்க கப்பல்களுக்கு ஈரான் தடை: கச்சா எண்ணை விலை உயர்வு
அமெரிக்க கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளது. ஈரானின் அணு ஆயுத கொள்கைக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ஈரானில் இருந்து எண்ணை இறக்குமதி செய்ய கடந்த ஜூலை மாதம் முதல் தடை விதித்துள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் தனது நாட்டில் உள்ள பெர்சியன் வளைகுடா வழியாக எண்ணை கப்பல்கள் செல்ல தடை விதித்தது. அதையும் மீறி சென்ற அமெரிக்க கப்பல்களை நோக்கி ஈரான் விசைப் படகு மோதுவது போல் சென்று பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதனால் எண்ணை கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள எண்ணை நிறுவனங்களில் கச்சா எண்ணை மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தற்போது அது பேரல் ஒன்றுக்கு 100 டாலர் ஆக உள்ளது. லண்டனில் ஒரு பேரல் கச்சா எண்ணை 110.36 டாலர் ஆக விற்கிறது. இதனால் சர்வதேச அளவிலும் கச்சா எண்ணை விலை.
0 comments :
Post a Comment