ஈபிடிபி க்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் புகழாரம்.
பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திலும் அக்கறைகொண்டு ஈபிடிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் செயற்பட்டுவருவதாக தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பூநகரி பிரதேச சபைத் தலைவர் சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்று (9) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஜெயபுரம் சோலை கிராமத்தில் அமைக்கப்பட்ட நெற் களஞ்சிய திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு தற்போது தேவை அபிவிருத்தியாகும் அந்த அபிவிருத்தியை நிராகரிக்க நாம் தயாராக இல்லை எனவே அந்த அபிவிருத்தியை மேற்கொள்பவர்களுடன் நாம் சேர்ந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளோம். அந்த வகையில் பூநகரி பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் எனத்தெரிவித்த பிரதேச சபை தலைவர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் அபிவிருத்தி குழு கூட்டத்தை வழிநடத்தி செல்கின்றவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் பூநகரியின் அபிவிருத்தியில் மேலும் அக்கறை செலுத்த வேண்டும்.
இப் பிரதேசத்தில் வெளியிடங்களில் இருந்து வருகைதந்து பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு விடுதி வசதியின்மை ஒரு பெரும் குறைபாடாக காணப்படுகிறது. அத்தோடு வீதிகள் போக்குவரத்து துறைகளிலும் மேலும் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது எனவே இந்த விடயங்ககளில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment