பேரினவாத ஜே.வி.பியினருக்கு எதிராக யாழ்.மக்கள் போர்க்கொடி
ஜே.வி.பி லிருந்து பிரிந்து சென்ற பேரினவாத இயக்கமான மக்கள் போராட்ட இயக்கத்தினரை எதிர்த்து யாழ்.நகரில் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் நடாத்தப்பட்டது இன்று காலை 10 மணிக்கு யாழ்.பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இப்போராட்டம் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்தில் நிறைவு பெற்றது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.நகரைச் சேர்ந்த பொது மக்களும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் இதில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பபை வெளிப்படுத்தினார்கள்
பெண்கள் சிறுவர்கள் வயோதிபர் வாலிபர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தின் சமாதானத்தை கெடுக்க வேண்டாம் என்றும் யாழ்;.பல்கலைக்கழகத்தின் சமாதானத்தை கெடுக்க வேண்டாம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்பாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டனர்
இதேவேளை இவ்வார்ப்பாட்டத்தை முன்னிட்டு யாழ்.நகரில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஜே.வி.பி க்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்
0 comments :
Post a Comment