Sunday, January 29, 2012

பிரபாகரன் ஒரு மலையாளி! கொல்லத்திலிருந்து உருமைகோரும் மைத்துனி!

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு மலையாளி ஆவார் என்று ஆதாரங்களுடன் உரிமைகோரியுள்ளார், அவரது மைத்துனியான கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர்.

அவர் அற்காக பல்லாண்டு காலம் கட்டிக்காத்து வந்த ஆதரங்களை முன்வைத்து உள்ளதுடன் பிரபாகரனின் தந்தைக்கு சொந்தமான வீட்டையும் இனம்காட்டியுள்ளார்.

இவரின் பெயர் ஜானகி அம்மா. கொல்லத்தில் இருந்து 20 கிலோ மீற்றர் தொலைவில் இவரது இல்லம் உள்ளது.

ஜானகி அம்மாவின் தாயுடன் கூடப் பிறந்த ஆறு சகோதரர்களில் ஒருவர்தான் வேலுப்பிள்ளை. ஜானகி அம்மாவின் தாயின் பெயர் நானி அம்மா.

இந்நிலையில் பிரபாகரனுக்கு மைத்துனி என்று சொல்லி உரிமை கொண்டாடுகின்றார் ஜானகி அம்மா.

ஜானகி அம்மாவின் அம்மப்பா அதாவது வேலுப்பிள்ளையின் தகப்பன் இறந்தபோது வேலுப்பிள்ளை செத்த வீட்டுக்கு சென்று இருக்கின்றார். பிறந்த மண்ணுக்கு வேலுப்பிள்ளை சென்றிருந்த கடைசி தருணம் அதுதான். அப்போது ஜானகி அம்மாவுக்கு வயது 11. அதற்கு பின் வேலுப்பிள்ளையை ஜானகி அம்மா காணவே இல்லை.

ஜானகி அம்மாவின் தாய் நானா அம்மாவுக்கு வேலுப்பிள்ளை மாதாந்தம் ரூபாய் 50 அனுப்பி வந்திருக்கின்றார். காசு அனுப்புகின்றமையை நானா அம்மாவின் மரணத்துக்கு பின்னர் வேலுப்பிள்ளை நிறுத்திக் கொண்டார். அந்நாட்களில் ரூபாய் 50 என்பது மிகவும் கணிசமான தொகைதான் என்கின்றார் ஜானகி அம்மா.

வேலுப்பிள்ளையால் அனுப்பப்பட்டு இருந்த போஸ் கார்ட்டுகளை ஜானகி அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார்.

இதில் அழுத்தி காணொளி பாருங்கள் !



போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்போது, என்டிரிவி ஊடகவியலாளர்களுக்கு பல உண்மைகளை எடுத்துரைத்த ஜானகி அம்மா, 1991ம் ஆண்டு இந்திய பிரதமர் கொலையை அடுத்து புலனாய்வுத்துறையினர் தனது வீட்டை தேடிவரும் வரை உலகம் பேசுகின்ற இந்த பிரபாகரன்தான் எனது மைத்துனர் என்பதை உணர்ந்திருக்கவில்லை என்ற கூறியுள்ளதுடன், செய்துள்ள கரும வினைகள் அத்தனைக்கும் பிராயச்சித்தமாக ஆயுதங்களை கிழே போட்டுவிட்டு நல்லதோர் வாழ்வினை தேடுமாறு வேண்டியுள்ளார்.

மேலும் தன்னுடன் வைத்திருந்த ஆவணங்களில் ஒன்றை ஊடகவியலாளர்களுக்கு காட்டினார். அனுப்பியவரின் முகவரி ஆர். வேலுப்பிள்ளை, வல்வெட்டி ஸ்ரோர், 224 கே. கே. எஸ். ரோட், யாழ்ப்பாணம் என்று உள்ளது. பிரபாகரன் என்று ஒரு ஆண் மகனை பெற்று எடுத்து இருக்கின்றார் என்று இந்த போஸ் கார்ட்டில் எழுதி இருக்கின்றார் வேலுப்பிள்ளை. இந்த போஸ் கார்ட் 1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பின் வேலுப்பிள்ளையிடம் இருந்து போஸ் கார்ட் எதுவும் வந்திருக்கவில்லை.

பிரபாகரனை ஜானகி அம்மா ஒரு போதும் நேரில் பார்த்து இருக்கவில்லை. அல்லது பிரபாகரனுடன் தொலைபேசியில் கதைத்து இருக்கவுமில்லை. ஆனால் மாமன் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெரும் தலைவர் பிரபாகரன் என்று அடித்துக் கூறுகின்றார்.

மாமன் வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் குடியேறிய பின்னர் பிரபாகரன் உட்பட பிள்ளைகளை தமிழில் படிக்க வைத்து தமிழ் கலாசாரத்தில் வளர்த்து எடுத்து இருக்கின்றார் என்று இயல்பாகவே சொல்கின்றார் ஜானகி அம்மா.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com