கருணாவை கொல்ல அனுப்பிய கரும்புலி அமெரிக்க தூதரகத்தில் சரணடைந்தது. விக்கிலீக்ஸ்
புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்றும் கருணா, அமைச்சர் தேவானந்தா ஆகியோரில் ஒருவரை கொல்ல வேண்டும் என இவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்றும் ஜீவரட்ணம் சொல்லி இருக்கின்றார். சுய விருப்பத்தில் இயக்கத்தில் சேர்ந்து இருந்தார் என்றும் புலிகளின் பிரசாரங்களை செவிமடுத்து இயக்கத்தில் சேர்ந்தபோது வயது 15 என்றும் 2003 ஆம் ஆண்டு புலிகளின் கரும்புலிகள் படைக்குள் உள்வாங்கப்பட்டார் என்றும் கூறி இருக்கின்றார்.
கரும்புலி உறுப்பினராக்கப்பட்டமையை தொடர்ந்து வட மாகாணத்தில் 06 மாதங்களுக்கு மேலாக பயிற்சிகள் வழங்கப்பட்டார் என்றும் குறிப்பாக மூளைச் சலவை செய்யப்பட்டார் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
மட்டக்களப்பை சேர்ந்தவர் என்கிற வசதியைப் பயன்படுத்தி கருணாவை அடுத்துக் கெடுத்துக் கொலை செய்ய வேண்டும் என இவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது என தெரிவித்து இருக்கின்றார்.
அதே நேரம் கருணா, தேவா ஆகியோரின் நடமாட்டம் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்காணிக்கின்றமைக்காக வவுனியாவுக்கு அடிக்கடி சென்று வர உத்தரவிடப்பட்டு இருந்தார் என்றும் சொல்லி இருக்கின்றார்.
இயக்கம் மீது ஏன் வெறுப்பு அடைந்தார்? என்று தூதரக அதிகாரிகளால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்கையில் குடும்ப அங்கத்தினரை சந்திக்கின்றமைக்கு இயக்கத்திடம் பல தடவைகள் அனுமதி கோரி இருந்தார் என்றும் ஆனால் ஒவ்வொரு தடவையும் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் ஆகவே இயக்கத்தை விட்டு விலக தீர்மானித்தார் என்றும் சொல்லி இருக்கின்றார்.
அமெரிக்கா அரசியல் தஞ்சம் வழங்க வேண்டும் என்பது இவரின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால் அமெரிக்க தூதரகம் இவரை இலங்கைப் பொலிஸாரிடம் கையளித்தது.
இவரால் தூதரகத்துக்கு ஏதேனும் ஆபத்து நேருமா? என்பதையும் ஆராய்ந்தும் இருக்கின்றது.
இவர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டமையை தொடர்ந்து அலரி மாளிகைக்கு அடுத்தாக அதாவது தூதரகத்துக்கு 100 மீற்றர் தொலைவில் இருந்து தற்கொலை அங்கி ஒன்று மீட்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால் இவருக்கும் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிக்கும் சம்பந்தம் கிடையாது என பாதுகாப்பு வட்டாரங்கள் மூலம் அமெரிக்கா உறுதிப்படுத்திக் கொண்டது.
தூதரகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழமை போலவே காணப்பட்டன.
இந்நபர் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்தான் என்று இலங்கைப் பாதுகாப்புப் படையினர் ஆரம்ப விசாரணைகளில் கண்டுபிடித்து தூதரகத்துக்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர்.
0 comments :
Post a Comment