ஓமான் மற்றும் சவூதியிலிருந்து எரிபொருள் கொள்வனவுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்.
ஓமான் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்வது தொடர்பாக, அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது இதன் பிரகாரம் பேச்சுவார்த்தைகளை நடாத்தும்பொருட்டு ஓமானின் பெற்றோலிய அமைச்சர் கலாநிதி மொஹமட் பின் ஹமாட், நாளை மறுதினம், இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தானத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
நூளை இங்கு வரவுள்ள ஓமான் பெற்றோலிய அமைச்சருடன் விசேட தூதுக்குழுவினரும், வருகை தரவுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆராய்வதே, இவர்களது விஜயத்தின் நோக்கமென, அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரும் ஓமான் தூதுக்குழுவினர், ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.
0 comments :
Post a Comment