அப்துல் கலாமிடம் சென்ற யாழ். ஊடகவியலாளர்களை தடுத்த துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணத்தின் செயற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் கலாநிதி அப்துல் கலாம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து அங்கு உரை நிகழ்த்தினார்
இதன்போது கலாநிதி அப்துல் கலாம் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். ஆனால் மண்டபத்திற்கு வெளியே பெருந்திரளான மாணவர்கள் நின்றிருந்த போதும் அவர்கள் அப்துல் கலாமின் உரையினை செவி மடுப்பதற்கு போதிய ஒலி வசதிகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் செய்யப்படவில்லை.
மண்டபத்தில் 500 இற்கும் குறைந்த மாணவர்கள் மட்டுமே அமர்ந்து கொள்ளமுடியும் என்பதை கூட அறிந்திருக்காமல் துணைவேந்தர் மேற்கொண்ட முன் ஏற்பாடுகள் பலரையும் அதிருப்தியடையச்செய்துள்ளனர்
இம்மண்டபத்திற்குள்ளாக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் எவரும் சென்று செய்தி சேகரிப்பதற்கு துணைவேந்தர் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளவில்லையென்றும் குறிப்பாக ஊடகவியலாளர்களை வாசலிலேயே வாயிற்காவலர்களை கொண்டு துணைவேந்தர் தடுத்துள்ளார்
இதனால் கடுப்படைந்த ஊடகவியலாளர்கள் காவலாளிகளுடன் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஒரு சில ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்துச்சென்றுள்ளனர்
குறிப்பாக இலங்கைக்கான இந்திய தூதுவர் துணைத்துர்துவர் உள்ளிட்டவர்கள் யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் ஊடக ஆசிரியர்களை சந்தித்த போது துணைவேந்தரது செயற்பாடுகள் தொடர்பாக கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்
இதேவேளை அண்மைக்காலமாக ஊடகங்களுடன் பேசுவதற்கு துணைவேந்தர் மறுத்து வருவதோடு ஊடகவியலாளர்கள் எவரையும் சந்திப்பதற்கு அவர் அனுமதி வழங்கவில்லை. அத்தோடு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் ஊடகவியலாளர்களை அனுமதிக்க கூடாது என்றும் அவர் காவலாளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் தெரியவருகின்றது
0 comments :
Post a Comment