திருமணமாகி ஒரு மாத காலத்தில் கணவன் தற்கொலை - சீதுவையில் சம்பவம்
ஐந்து வருடங்களாக காதலித்து, திருமணம் முடித்த ஒரு மாத காலத்தில் மனைவியோடு ஏற்பட்ட மனக் கசப்பின் காரணமாக , கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீதுவை , மூக்கலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
டீ.அர்ச சில்வா (25 வயது)என்ற இளைஞனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
தற்கொலை செய்து கொண்டவரும் அவரது மனைவியும் கொழும்பில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் பயின்று கொண்டிருந்த காலத்தில் அறிமுகமான ஐந்து வருட காலமாக காதலித்துள்ளனர் .
கடந்த டிசம்பர்மாத இறுதியில் இவர்களது திருமன வைபவம் இடம்பெற்றுள்ளது .இருவரும் சீதுவை , மூக்கலங்கமுவ பிரதேசத்தில் உள்ள கணவரின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் அவர்களுடைய வீட்டில் விருந்துபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வைபவம் முடிவடைந்த பின்னர் பிற்பகல் 3 மணியளவில் இருவரும் மகிழ்ச்சியாக வீட்டின் மேல் மாடியில் இருக்கும் அவர்களது அறைக்கு சென்றுள்ளனர்.
அறையில் வைக்கப்பட்டிருந்த மதுபானத்தை (பிறென்டி) கணவன் அருந்த முயன்றுள்ளார். மனைவி அதனை தடுத்துள்ளார் .ஆயினும் கணவன் அதை பொருட்படுத்தாமல் மதுபானத்தை அருந்தியுள்ளார்.
இதனை அடுத்து மனைவியும் அந்த மதுபானத்தை அருந்தியுள்ளார் .இதனை அடுத்து கணவன் சிகரட் புகைக்கவே மனைவியும் பதிலுக்கு சிகரட் புகைத்துள்ளார். இதனை தொடர்ந்து மனைவிக்கு மயக்கம் ஏற்படவே அவர் கட்டிலில் சாய்ந்து உறங்கியுள்ளார் .
அவர் தூக்கம் தெளிந்து விழித்து பார்க்கையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டுள்ளார். இவ்வாறு சம்பவத்தில் இறந்தவரின் மனைவி பொலிசாருக்கு வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment