அணுசோதனை: ஈரான் சென்றது ஐ.நா. வின் ஐ.ஏ.இ.ஏ. குழு
ஈரானின் அணு சோதனை குறித்து ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியைச் சேர்ந்த (ஐ.ஏ.இ.ஏ) உயரதிகாரிகள் இன்று ஈரான் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். அணு சோதனை மற்றும் அணுஆயுதங்களை தயாரிப்பதாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈரான் மத்திய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் ஈரான் மீது பொருளாதார தடையை விதி்த்தது.
ஈரானின் இந்த அணுசோதனை விவகாரம், இந்தியா உள்ளிட்டநாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் பிரச்னை இருந்து வருகிறது.
மின்சார தேவைக்காவே அணுசோதனை என ஈரான் கூறிவந்தாலும், தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டல் மையத்தினை அதிகரித்து வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனை ஈரான் மறுத்து வருகிறது.
இந்த சூழ்நிலையி்ல், ஐ.நா.வின் அமைப்பான சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் (ஐ.ஏ.இ.ஏ.) துணை இயக்குனர் ஜெரனல் ஹெர்மான்நெக்ரட்ஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று ஈரான் சென்று அங்கு ஆய்வு நடத்துகின்றனர். அப்போது ஈரான் அணுவிஞ்ஞானிகள் மற்றும் உயரதிகாரிகளிடம் அணுசோதனை குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் ஈரானில் முகாமிட்டு இந்த சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தலைவர் யூகியோ அமோனா கூறுகையில், ஈரான் சென்றுள்ள குழுவினருக்கு அங்குள்ள அணுசக்தித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளிப்பர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்றார்.
ஈரானின் அணுசோதனை குறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி குழு நடத்தும் இரண்டாவது சோதனை இது ஆகும். கடந்த 2008-ம் ஆண்டு முதன்முறையாக ஐ.ஏ.இ.ஏ. குழு ஈரான் சென்று அணுதிட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தற்போது இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.
0 comments :
Post a Comment