புத்தாண்டை கொண்டாடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருடிய மாணவர்கள் இருவர் கைது
புத்தாண்டை கொண்டாட தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்றை திருடிய பாடசாலை மாணவர்கள் இருவரை நீர்கொழும்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு நகரிலுள்ள சில சிங்கள பாடசாலைகள் இரண்டில் தரம் 9, தரம் 10 , வகுப்புக்களில் கல்வி கற்கும் இரு மாணவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த முதலாம் திகதி நீர்கொழும்பு கடோகலே டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் விளையாடுவதற்காக கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் தனது பிள்ளைகளை அழைத்து வந்துள்ளார் .
அவர் தனது மோட்டார் சைக்கிளை மைதானத்தில் நிறுத்திவிட்டு சென்றதன் பின்னர் குறித்த மாணவர்கள் இருவரும் , அந்த மோட்டார் சைக்கிளை தள்ளியவாறு கடோல்கலே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்துவிட்டு சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிள் ஸ்டாட்ர் ஆகாததே இதற்கு காரணமாகும் .
அடுத்த நாள் திங்கட்கிழமை (2) மோட்டார் சைக்கிள் திருத்துனர் ஒருவரை அழைத்து வந்து சைக்கிளை ஆரம்பம் (செய்து இருவரும் அதனை கடத்தி செய்துள்ளனர் .
இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை பறி கொடுத்த பெண் நீர்கொழும்பு பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டை அடுத்து நீர்கொழும்பு ஏ;த்;துக்கால கடற்கரை பூங்காவில் வைத்து இரு மாணவர்களையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும் வினோதமாக இருப்பதற்காகவும் தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காகவே மோட்டார் சைக்கிளை திருடியதாக இரு மாணவர்களும் பொலிசாரிடம் வாக்குமூலமளித்துள்ளனர்.
0 comments :
Post a Comment