பாகிஸ்தானில் பிரதமர் கிலானியுடன், ராணுவ தலைமை தளபதி சந்திப்பு;
மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை
பாகிஸ்தானில் பிரதமர் கிலானியுடன் ராணுவ தலைமை தளபதி சந்தித்து பேசினார். பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அதை தொடர்ந்து அங்கு பிரதமர் கிலானி தலைமையிலான அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் ராணுவ புரட்சி ஏற்படும் அபாயம் உருவானது. அவ்வாறு புரட்சி ஏற்பட்டால் அதை அடக்க உதவுமாறு அமெரிக்காவுக்கு அதிபர் சர்தாரி எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து விசாரிக்க பாகிஸ் தான் சுப்ரீம் கோரிட்டு ஒரு கமிஷனை நியமித்தது. எந்த நேரத்திலும் புரட்சி மூலம் கிலானி அரசை கவிழ்த்து விட்டு ராணுவ ஆட்சி ஏற்படலாம் என்ற அபாயம் நிலவியது.
அதன் காரணமாக பாகிஸ்தானில் அரசியலில் நிலையற்ற தன்மையும், பதட்டமான நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் அ¢ஷ்பாப் பர்வேஷ் கயானி, பிரதமர் யூசுப்ரசா கிலானியை நேற்று சந்தித்தார். இவர்களது சந்திப்பு இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடந்தது.
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானில் உளவு நிறுவனமான “ஐ.எஸ்.ஐ.”யின் தலைவர் லெப்னென்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷா மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஹீனாரப்பானிஹரி ஆகியோரும் உடன் இருந்தனர். நாட்டின் பாதுகாப்பு பிரதமர் மற்றும் ராணுவ தலைமை தளபதி சந்திப்பின் போது நாட்டின் பாதுகாப்பு குறித்து விவாதித்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவை தவிர ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள “டெமோகேட்” விவகாரம் மற்றும் பக்கத்து நாடான ஆப்கானிஸ்தானில் நிலவும் பதட்டம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கையில் உதவி, அங்கு நிலையான தன்மை மற்றும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையில் ராணுவத்துக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிகிறது.
நாடு கடத்தப்பட்ட முன்னாள் அதிபர் முஷரப் இம்மாத இறுதியில் பாகிஸ்தான் திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. கைது நடவடிக்கை பயந்து கடைசி நேரத்தில் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல என தற்போது தெரிய வந்துள்ளது.
உளவுத்துறையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது கஜா பாஷா சமீபத்தில் துபாய் சென்று முஷரப்பை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் தற்போது நாடு திரும்ப வேண்டாம் என ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அதையடுத்து முஷரப் நாடு திரும்பும் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
0 comments :
Post a Comment