Wednesday, January 18, 2012

JVP யின் கிளர்ச்சிக் குழுவினர் புலிகளை இணைத்து ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்க முயற்சியாம்

ஜேவிபியின் கிளர்ச்சிக் குழுவினர் மாணவர் அமைப்புக்கள் என்ற பெயரில் மீண்டும் ஆயுதப் போராட்டமொன்றினை ஆரம்பிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் இப்பொழுது வடக்கு கிழக்கு பகுதிகளை மையமாக கொண்டு செயற்பட முற்பட்டுள்ளனர். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிபோராளிகளில் சிலருடன் அவர்கள் தொடர்பகளையும் கொண்டுள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கா தெரிவித்துள்ளார்.

அதே போன்று கடந்த காலங்களில் புலிகளுக்கு சிறுசிறு உதவிகளை செய்து வந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் சிலரையும் தமது கைகளுக்குள் போட்டுக்கொள்ள அவர்கள் முற்பபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாணவர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இலங்கையில் ஆயுதப்போராட்டமொன்று நடப்பதென்பது சாத்தியமே இல்லை.

இப்போதும் கூட தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் தமிழீழக் கனவில் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது பிள்ளைகளை இவ்வாறான பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க அனுமதிப்பதில்லை.தமது பிள்ளைகளை பாதுகாப்பான நாடுகளுக்கு உயர் கல்வி கற்க அனுப்பி விட்டு உங்களைப் போன்றவர்களை ஆயுதம் தூக்கி போராட சொல்லிக்கொண்டிருந்தார்கள் என அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com