Wednesday, January 18, 2012

கௌரவமான அரசியல் தீர்வினை இந்தியா எதிர்பார்க்குதாம் என்கிறார் எஸ். எம் கிருஸ்ணா

அதிகாரப்பரவலாக்கல் மூலம் ஒரு கௌரவமான அரசியல் தீர்வை இந்திய எதிர்பார்க்கிறது என இந்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். இன்று யாழ் நூல் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுவிச்சக்கரவண்டிகளை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் தீர்வானது அதிகாரப் பரவலாக்கல் அடிப்படையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் மீள் நல்லிணகத்தை எல்லா சமூகத்தின் மத்தியிலும் ஏற்படுத்த முடியும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினுடைய ஆரோக்கியமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவேண்டும் என எதிர்பார்க்கிறது.13 ஆவது அரசியல் திட்டத்தின் மூலம் நீடித்த அரசியல் தீர்வுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தேவையாகின்றது. இதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது. இத்தகைய அரசியல் தீர்வைக்கொண்டுவருவதற்கு இந்திய எப்போதும் தயாராக இருக்கின்றது.

இடம்பெயர்ந்த மக்களின் விடயத்தை திரும்பிப் பார்க்கும் போது மீள்குடியேற்றத்தில் மீள்குடியேற்றத்தில் மிகவும் அக்கறை செலுத்தியிருக்கின்றோம். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருகைதந்தபோது 3 இலட்சமாக காணப்பட்ட மக்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு 10 ஆயிரம் ஆகக் காணப்படுகின்றது,
நீங்கள் கடந்த 30 வருடகாலப் போரில் பல இன்னல்கனை அனுபவித்திருக்கின்றீர்கள்.
தற்போது அமைதி சமாதானம் நிலவுகின்றது. உங்களுக்கு என்ன உரித்தானது என்பதை இந்திய அறிந்து வைத்திருக்கின்றது.

இம்மக்களுக்காக 49 ஆயிரம் வீடுகளை 270 அமெரிக்க டொலர் செலவில் அமைப்பதற்குரிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. முன்னோடியாகத் தெரிவுசெய்யப்பட்ட திட்டங்கள் வடமாகாணத்தில் நல்ல முறையில் நடைபெற்றிருக்கின்றன.

ஐந்து மாட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் துவிச்சக்கரவண்டிகள், 270 மில்லியன் ரூபா செலவில் வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.எதிர்காலத்தில் இவ்வீட்டுத்திட்டத்தை யுவனெச்சியாரின் உதவியுடன் நடைமுறைப்படுத்த உள்ளோம். அத்துடன் போக்குவரத்து, கண்ணிவெடி அகற்றல், கலாச்சாரம், போன்ற விடயங்களிலும் உதவிசெய்து வருகின்றோம்.
அச்சுவேலி கைத்தொழில்பேட்டைய புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும்.

பலாலி விமான நிலையத்தை பொது மக்களின் பாவனைக்கான நிலையமாக அவிபிருத்தி செய்யவுள்ளோம். வடமாகாணத்திற்கான புகையிரதப் பாதை சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

2015 ஆம் ஆண்டு இவ்வேலைகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கின்றேன். அத்துடன் எதிர்காலத்தில் மேலும் திட்டங்களுக்கு உதவிசெய்யவுள்ளோம் என இந்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி, யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சார சுவாமிகள், யாழ் நாகவிகாரை விகாராதிபதி,
யாழ் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம், யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, இந்திய அதிகாரிகள் மற்றும் யாழ் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment