யாழில் நிர்ணய விலைக்கு மேலாகப் பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை
யாழ் தரைவழிப்பாதைகள் முடக்கப்பட்டிருந்த காரணத்தினால் யாழ் மக்கள் பொருட்களுக்கு அதிகூடிய விலை செலுத்தவேண்டியிருந்தது யாவரும் அறிந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் தரைமார்கமாக பொருட்கள் கொண்டுவரப்படுவதுடன், பொருட்களுக்கான போக்குவரத்துச் செலவு சாதாரண நிலையை அடைந்துள்ளதுடன், பொருட்களை பொழும்பிலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் குறைந்த விலையிலேயே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆனால் இவ்வாறான சூழ்நிலையிலும் யாழில் சில சக்திகள் சாரணவிலையில் மக்களுக்கு பொருட்களை வழங்குவதை தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
ஆகையால் நிர்ணய விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்வதை அவதானித்து பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோருக்கு யாழ்.பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது.
அத்துடன், வர்த்தகர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் விற்பனை விலைக்கு மேலதிகமாக ஒரு ரூபா பணத்தைக்கூட கொடுக்க வேண்டாம் எனவும் குறித்த விற்பனை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment