லஞ்ச மோசடியில் பொலிஸாரை முந்திய கல்வி நிறுவனங்கள் முதலாமிடத்தில்.
இலங்கையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளில் கூடுதலாக முறைப்பாடுகள் கல்வி நிலையங்களுக்கு எதிராகவே கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணையாளர் சபையின் தவிசாளர் முன்னாள் உயர் நீதி மன்றத்தின் நீதிபதி ஜயத் பாலபட்டபெந்தி தெரிவித்தார்.
கல்வி நிலையங்களில் ஊடாக 310 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு அடுத்த கூடுதலான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு எதிரானது என தெரிவிக்கிப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 242 ஆகம்.
பிரதேச செயலக அலுவலகம் மற்றும் உள்ளுராட்சி மன்றம் என்பன அடுத்த பிரிவில் கூடுதலாக முறைப்பாடுகள் கொண்டதாக உள்ளன.
கடந்த வருடம் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணையாளர் சபைக்கு 1978 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதில் 1050 முறைப்பாடுகளை விசாரணைக்காக இந்த வருடத்தின் போது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment