Tuesday, January 17, 2012

முல்லைத்தீவில் கணவன் - மனைவி விஷமருந்தி தற்கொலை

முல்லைத்தீவு - முல்லியவலை - பாலக்கன்னி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய சண்முகன் நெரஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நெரஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நேற்று இரவு இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com