வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள் : யாழ் கட்டளைத் தளபதி புகழாரம்
தென்பகுதி மாணவர்களைவிட வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
காலை வேளைகளில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று படித்து முன்னேறும் மாணவர்களை வடபகுதியில் தான் பார்க்கிறேன். கல்விதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. அதுதான் சமுதாயத்தை வடிவமைக்கிறது. வடபகுதி மாணவர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர நிலையில் வைத்து கல்வி போதிக்கப்படுவதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தேசிய ரீதியில் யாழ் மாணவன் முதலிடம் பெற்றதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்களின் வெற்றிக்காகப் பாடுப்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் அவர்கள் செய்த தியாகங்கள் என்பன பாராட்டப்படவேண்டும். தென்பகுதி மாணவர்களைவிட வடபகுதி மாணவர்கள் கடின முயற்சி உடையவர்கள். இனி வருகின்ற மாணவர் சமுதாயத்துக்கு தேசிய மட்ட சாதனை இந்த மாணவர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக இருக்கும். கல்வி நீண்ட பயணம், நீங்கள் பல்கலைக்கழகத்தில் சரியான திசையில் பயணிக்க வேண்டும் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment