சிரியாவில் இடம்பெற்று வரும் மோதல்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 60 பேர் கொண்ட கண்காணிப்பு குழு விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென அரபு லீக் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. மோதல்களை கண்காணிப்பதற்காக அரபு லீக்கின் கண்காணிப்பு குழு விஜயம் மேற்கொண்டதன் பின்னர் சிரிய பாதுகாப்பு படையினால் தாக்கப்பட்டு 150 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்தும் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதால் கண்காணிப்பு பணியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென அரபு லீக்கின் பாராளுமன்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் 88 பேர் அடங்கிய ஆலோசனை குழு தீர்மானித்துள்ளது.
கடந்த 10 மாதங்களாக சிரியாவில் இடம்பெற்ற மோதல்களினால் 5 ஆயிரத்திற்கும் மேறப்ட்டோர் மரணமடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment