தபால் தொழிற்சங்கம் நாளை சத்தியாக்கிரக போராட்டத்தில்
தபால் தொழிற்சங்கம் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நாளை ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
நாளை பகல் 12 மணிக்கு சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்து பின்னர் நடைபயணமாகச் சென்று ஜனாதிபதி அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை பகல் தபால் தலைமையகத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகம் மேற்கொள்ளப்படும் என தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், தொடர்ந்தும் அவர் தபால் மா அதிபராக செயற்பட்டு வருவதாகவும், நிறுவனத்தை பாதுகாப்பதன் பொருட்டு தாங்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகளை நிராகரித்து செயற்படுவதால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்ததாகவும் தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment