நன்னடத்தை,திறமை உள்ளவர்கள் தண்டனை காலத்திற்கு முன்னரே விடுதலை செய்யபடுவர்
சிறைச்சாலைகள் புனருத்தாரண மறுசீரமைப்பு அமைச்சும், மட்டக்களப்பு சிறைச்சாலையும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறைச்சாலைகள் புனருத்தாரண மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர கலந்து கொண்டார்.
இவ் விழாவில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசிறி கஜதீர சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் அனைத்துத் துறைகளையும் சார்ந்த திறமையானவர்கள் உள்ளனர். எனவே சிறைக் கைதிகளில் நன்னடத்தையும் திறமையுமுள்ளவர்களை தமக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலத்திற்கு முன்னரே விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அவர்,மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வண்ணம் இம்முறை மட்டக்களப்பில் எமது பொங்கல் விழாவை நடத்தியதில் மிக்க மகிழ்ச்சி யடைகின்றேன். இதேபோல இனிவரும் காலங்களில் சகல இனங்களும் இணைந்து செயற்படும் வண்ணம் முஸ்லிம்களின் ரம்ஸான், கிறிஸ்தவர்களின் கிறிஸ்மஸ், சிங்களவர்களின் வெசாக் முதலிய பண்டிகை விழாக்களை நடாத்த தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment