இந்திய அமைச்சர் கிருஷ்ணா வடக்கிற்கு விஜயம்
இலங்கைக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா இன்று வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 29 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அதன் நிர்வாகத்திடம் கையளித்தார்.
இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட சிவபாதக் கலையகத்தை திறந்து வைத்ததுடன் , இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களையும் உரியவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வுகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் -பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் , இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா , இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ,மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment