கடுகதி வீதியில் கனரக வாகனங்களுக்கான அனுமதி அடுத்தவாரம் வழங்கப்படும்
லொறி, டிரக், கொள்களன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு கடுகதி வீதியூடாக பயணிப்பதற்கு, அடுத்த வாரம் தொடக்;கம் அனுமதி வழங்க, போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது என கடுகதி வீதியின் செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் பீ.பீ.கே. பண்டார, தெரிவித்துள்ளதுடன் கடுகதி வீதியில் வேக எல்லை உட்பட சட்டங்கள் தீவிரமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , இதற்கிணங்க, கனரக வாகனங்கள், கடுகதி வீதியில் பயணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாகனங்கள் ஆயிரத்து 500 ரூபாவிற்கும் 2000 ரூபாவிற்கும் இடைப்பட்ட நிதியினை செலுத்த வேண்டுமென்றும், அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொருத்தமான வாகனங்களுக்கு மாத்திரமே, கடுகதி வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment