அம்பாறை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக அலையும் மாவை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கட்சியின் மீள் கட்டுமானப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தின் கிராமம் கிராமமாக சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி உரசல்கள் அதிகரித்துவரும் நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை புறந்தள்ளி தாம் மேலோங்கும் செயலில் இறங்கியுள்ளதாக த. தே. கூ வின் ஏனைய கட்சிகள் அதிருப்தி தெரிவிக்கின்றன.
அண்மையில் கட்சியின் தலைவர் சம்பந்தன் இல்லத்தில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரை தமது கட்சியில் இணைத்துகொண்டதுடன் அவர்களை மத்திய குழுவினுள்ளும் உள்ளவாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment