ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குத்தான் பாதிப்பு: ஐ.எம்.எப்
ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குதான் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு சக்தி திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்குலக நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் தேவையான மாற்று ஏற்பாடு இல்லாமல் அந்நாட்டின் மீது தடைவிதித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 20 முதல் 30 விழுக்காடு உயரும் என்று ஐ.எம்.எப் கூறியுள்ளது.
0 comments :
Post a Comment