பரீட்சைகள் திணைக்கள சேவைகளைப்பெற நாளை முதல் புதிய சேவை அறிமுகம்
பரீட்சை திணைக்களத்தின் சேவைகளை இலகுபடுத்துவதற்காக, புதிய முறைகள், நாளை தொடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.பரீட்சை திணைக்களத்தின் சேவைகளை கிரமமான முறையில் மேற்கொள்ளும் நோக்குடன், இத்தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சேவைகளை விரிவுபடுத்த, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், இலத்திரனியல் மற்றும் சாதாரண தபால் மூலம் உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த வேலைத்திட்டம் நாளை தொடக்கம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்களம் தெரிவிக்கிறது.
011-2177771 எனும் தொலைபேசி இலக்கங்களுடாக, தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அவசர தொலைபேசி இலக்கமாக 1911 இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 011-2177411 ,011-2785220 என்ற தொலைநகல் இலக்கங்கள் மற்றும் exam@doenets.lk என்ற மின்னஞ்சல் முகவரியூடாக, தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பரீட்;சை ஆணையாளர் நாயகம் இலங்கை பரீட்சை திணைக்களம் தபால் பெட்டி இலக்கம் 1503, கொழும்பு என்ற முகவரியூடாக, தகவல்களை கோர முடியும். சாதாரண தபால் மூலம் தகவல்களை கோரும்போது, பொது மக்கள் இணைப்பு பிரிவெதுவென கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் குறிப்பிட வேண்டும்.
தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக, கோரிக்கை விடுக்கும் சகல அழைப்புகளும், பதியப்படும். அவசரமாக பதில்களை வழங்க முடியாத தகவல்கள் தொடர்பில், ஒரு தினத்திற்குள் தீர்வுகளை வழங்குவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment