யாழில் சட்டவிரோத சிறகு வலை கடற்றொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் தீவிரம்
காரைநகர் பொன்னாலை மற்றும் யாழ்.பண்ணைக் கடலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த சிறகுவலைக்கூட்டங்களை கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் அகற்றிவருகின்றது.கடந்த 30 வருட யுத்தகாலத்தில் கடற்றொழில் சட்டங்கள் யாவும் வடபகுதியில் முற்று முழுதாக பின்பற்றப்படாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சமாதானத்தைத் தொடர்ந்து அச்சட்டங்கள் முழுதாக அமுல் படுத்தப்படுகின்றது
இதன் ஒரு பகுதியாகவே கடற்கரையிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் பொன்னாலைப்பாலத்திலும் பண்ணைப்பாலத்தில் 20 மீற்றர் தூரத்திலும் சிறகு வலைக்கூட்டங்களை அமைக்க கடற்றொழில் திணைக்களம் பணித்துள்ளது
இதனை பொருட்படுத்தாது அதற்குட்பட்ட பகுதியில் சிறகு வலைக் கூட்டங்களை அமைத்த தொழிலாளர்களது வலைகளையே திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று அகற்றி வருகின்றனர்.
இவ்வாறு நேற்றைய தினம் பொன்னாலையில் ஜந்து சிறகு வலைக் கூட்டங்களை அதிகாரிகள் அகற்றி அங்கிருந்த வலைகளைக் கைப்பற்றியுள்ளனர்
கடற்றொழில் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களத்தின் இந்நடவடிக்கைகளுக்கு மீனவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதோடு ஏனைய தடைசெய்யப்பட்ட தொழில்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்
0 comments :
Post a Comment