ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பு.
ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நெர்பா, நேற்றுமுன்தினம் இந்தியாவிடம், 10 ஆண்டுக் கால குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டது. இக்கப்பல், ஐ.என்.எஸ்., சக்ரா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உபயோகிக்கும் ஆறாவது நாடாக இந்தியா சேர்ந்துள்ளது.
உலகில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளிடம் மட்டுமே, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இந்தியா, ரஷ்யா இடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யாவின் நெர்பா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நேற்றுமுன்தினம் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தில், ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் அஜய் மல்ஹோத்ரா, ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவர் ரோமன் ட்ரோட்சென்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இக்கப்பல் ஒப்படைக்கப்பட்டது.
மொத்தம் 9 லட்சம் கோடி டாலர் செலவில், 10 ஆண்டுக் கால குத்தகை அடிப்படையில் இக்கப்பல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உலகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தும் ஆறாவது நாடாக இந்தியாவும் சேர்ந்துள்ளது. கடந்த 1980ல், ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா இயக்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment