Tuesday, January 10, 2012

தமிழ்நாட்டிலிருந்து நாடு திரும்பும் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து நாடு திரும்பும் இலங்கை அதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன், 2010ம் ஆண்டு 2,054 அகதிகளும், 2009ம் ஆண்டு 818 அகதிகளும், 2011ம் ஆண்டு 1, 728 அகதிகளும் நாடு திரும்பி இருந்தனர்.

எனினும் இந்த பயணிகள் கப்பல் சேவை இடை நிறுத்தப்பட்டதன் பின்னர், அகதிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் அகதிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இந்தியாவுடன் பேசி வருவதாக, இலங்கை கப்பல் சேவை நிறவனத்தின் தலைவர் காஞ்சன ரணவக்க தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com