Friday, January 20, 2012

ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்க்க சதி ராணுவ அதிகாரிகள் இருவர் கைது!

வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க, சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக, இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை போலவே, வங்கதேசத்திலும், அடிக்கடி ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கடந்த 2009ல் நடந்த தேர்தலில், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று பிரதமரானார்.

இவருடைய ஆட்சியை கவிழ்க்க, ராணுவ அதிகாரிகள் சூழ்ச்சி செய்ததாக, ராணுவ தளபதி மசூத் ரசாக் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். தாகாவில், நேற்று நடந்த நிருபர்கள் கூட்டத்தில், மசூத் ரசாக் குறிப்பிடுகையில், "ஹசீனா ஆட்சியை கவிழ்ப்பதற்காக, கர்னல் மற்றும் மேஜர் அந்தஸ்திலான இரண்டு அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சதி திட்டம் தொடர்பாக, மேலும் 14 முதல் 16 அதிகாரிகளை, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகள், அரசை கவிழ்க்க தீட்டிய சதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்' என்றார்.


No comments:

Post a Comment