சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை.
எல்லைக்கிராமங்களை புலிகளின் அச்சு றுத்தலிலிருந்து பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட ஊhகாவல் படையினர் என முன்னர் அறியப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரை நாட்டின் அபிவிருத்திக்கான பயிற்செய்கையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் அரலகன்வில வலயத்தின் தலைவரும் பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டருமான சந்திரபால , தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றுவதே சிவில் பாதுகாப்பு படையின் நோக்கமாகும் எனவும் இதன்பொருட்டு பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை 70 விவசாய பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இம்மாவட்டத்தில் இதுவரை 800 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திம்புலாகல நிதன்வல பிரதேசத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விவசாய பண்ணைகளின் மூலம் சிறந்த அறுவடை கிடைத்துள்ளது. சோளம், பயிற்றங்காய், கத்தரிக்காய், மிளகாய், பாசிப்பயறு, கௌப்பி, குரக்கன் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. இவ் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு விசேட திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவிக்கின்றது.
...............................
0 comments :
Post a Comment