லசந்த விக்கிரமதுங்க மறைந்து மூன்று வருடங்கள் நிறைவடைவதையிட்டு எதிர்ப்புக் கூட்டம்
சிரேஸ்ட ஊடகவியலாளரும் சன்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு மூன்று வருடங்கள் பூர்த்தியடையதையிட்டு எதிர்வரும் புதன்கிழமை (11) பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு ஜயவர்தன நிலையத்தில் எதிர்ப்புக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
.சுதந்திரத்துக்கான அரங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
.எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பேராசிரியை நிமல்கா பெர்னாந்து, பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி ஜே.சி .வெலி அமுன, சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, சட்டத்தரணி கே .டப்ளியூ ஜனரஞ்சன, சுதந்திரத்துக்கான அரங்கத்தின் முக்கியஸ்தர் பிரிட்டோ பெர்னாந்து, பாடகர் ஜயதிலக பண்டார உட்பட மேலும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
0 comments :
Post a Comment